கஹத்துடுவ-தியகம வீதியில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று திங்கட்கிழமை பிற்பகல் (25) வீதியிலிருந்து விலகி நெல் வயலில் கவிழ்ந்தது.
அவர்களில் 19 பேர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வீதியில் மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, பேருந்து வீதியிலிருந்து விலகிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 19 பேரில், 17 பேர் ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவரை களுபோவில போதனா வைத்தியசாலையிலும், மற்றொருவரை வெட்டறை வைத்தியசாலையிலும் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஹத்துடுவவில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது விபத்து; 19 பேர் காயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space