நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொடவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு பேரவையானது அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (22) பாராளுமன்ற கட்டத்தொகுதியில் கூடியது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவின் ஓய்வைத் தொடர்ந்து நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புதற்கு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவையானது பரிசீலனை செய்தது.
ஜனாதிபதியின் பரிந்துரைக்கு பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதியரசர் யசந்த கோதாகொடவை நீதிச்சேவையின் உறுப்பினராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்துள்ளது.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space