வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த , இலங்கையர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று அதிகாலை 12.52 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 46 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் உற்பத்தியான 'மென்செஸ்டர்' ரகத்தைச் சேர்ந்த 31,000 சிகரெட்டுகள் அடங்கிய 155 கார்ட்டூன் சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்ட அதிகாரிகள், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அனைத்து சிகரெட்டுகளையும் அரசுடைமையாக்கியதுடன், குறித்த நபருக்கு 155,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space