மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில், விடுதலை புலிகளால் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை (13) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிலப்பரப்பில் சுமார் 20 அடி ஆழம் வரை அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அங்கிருந்து எந்தவொரு ஆயுதமும் கண்டெடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த குழி முழுமையாக மூடி வைக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மண்முனையில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு - எவையும் சிக்கவில்லை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space