ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பயணிகள் பஸ் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், அதிலிருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் குறித்து ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space