யாழில், ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் சனிக்கிழமை (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பருத்துத்துறை - சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே, நல்லூரடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space