இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தமக்கான பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை இராப்போசன விருந்துபசாரத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அவரது பாரியார் ஆகியோருக்கு விடைபெறும் முகமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தூதுவரின் பதவிக் காலத்தில் இலங்கைக்கு அவர் வழங்கிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்கும் மற்றும் அவர்களின் நட்புறவுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், தூதுவர் கீ சென்ஹொங்கின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இலங்கை மற்றும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான தனது அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
விடைபெறும் சீனத் தூதுவருடன் கோட்டா, மஹிந்த சந்திப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space