நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (04) சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடமைக்கு சமூகமளிக்கவில்லை.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்து கட்டுதல் மற்றும் ஊசி போடும் நடவடிக்கைகள் இடம் பெற்றதோடு,அவசர நோயளர்களை விடுதியில் அனுமதிக்கும் நடவடிக்கை மாத்திரமே இடம் பெற்றது.
வேறு எந்த வைத்திய சேவைகளும் இடம் பெறவில்லை. இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
மேலும் தூர இடங்களில் இருந்துவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பலதரப்பட்டவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு தொடர்ச்சியாக வைத்தியர்களின் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டம் !
Ad Space
Ad Space
Ad Space
Ad Space