வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸாரை கைதுசெய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக ஒரு கிலோ 970 கிராம் கஞ்சாவினை கொண்டு சென்ற வேளை இரு பொலிஸாரையும் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க
கஞ்சாவுடன் இரு சிறிலங்கா காவல் துறையினர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space