ளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கிய நிலையில் நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (21) மாலை பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சென்மன்குண்டு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தனது விவசாய நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, சட்டவிரோதமான முறையில் அமைத்திருந்த மின்சார வேலியில் மோதியதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பூநகரியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space