பொலன்னறுவை - தியபெதும பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த குறித்த ஒருவர், நேற்று சனிக்கிழமை (21) மாலை தியபெதும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தியபெதும - அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மற்றுமொருவருடன் மோட்டார் சைக்கிளில் பேக்குளம் பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்குச் சென்று கொண்டிருந்த போதே காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தியபெதும பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காட்டு யானைத் தாக்கி முதியவர் பலி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space