வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை (18) பொலிஸ் அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த போது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட காரை இந்தத் தாக்குதலாளி பொலிஸ் வளாகத்தின் மீது மோதியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.