மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை (21) அவ்வப்போது மழை அல்லது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாளைய தினத்திற்கான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டின் சில இடங்களில் மி.மீ. 100க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என குறித்த அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.