நாகர்கோவில் கிழக்கு காட்டுப் பகுதியில் கண்டறியப்பட்ட போர்க்காலக் கைக்குண்டு!
Ad Space
Ad Space
யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு காட்டுப் பகுதியில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கைக்குண்டொன்று இன்று திங்கட்கிழமை (08.06.2026) கண்டறியப்பட்டுள்ளது.
நாகர்கோவில் கிழக்கு காட்டுப் பகுதியிலுள்ள பனை மரமொன்றின் கீழ் கைக்குண்டு காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர். குறித்த விடயம் தொடர்பான அறிக்கை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமையக் குண்டைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Ad Space
Ad Space