நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் முதலாவது குருபூசை நிகழ்வு சித்திரை மாத திருவாதிரை நட்சத்திர நாளான புதன்கிழமை (22.04.2026) காலை-08.30 மணியளவில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது.
நல்லை ஆதீனக் குருமூர்த்த ஆலயத்தில் சிறப்புப் பூஜை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. நல்லை ஆதீன முன்றலில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள நல்லை ஆதீன இரண்டாவது குருமகா சந்நிதானத்தின் திருவுருவச் சிலை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு மலர்மாலைகள் அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நல்லை ஆதீன இரண்டாவது குரு மகா சந்நிதானத்தின் நினைவைப் போற்றும் வகையிலான சிறப்பு மலரை வெளியிட்டு வைத்தார்.
நல்லை ஆதீன இரண்டாவது குருமகா சந்நிதானம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் திருவுருவச் சிலை நல்லூரில் திறப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space