நாட்டின் சில மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (15) காலை 6 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
சீரற்ற வானிலையால் 08 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 104 பேர் தற்போது இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space