உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ள நிலையில், நௌபர் மௌலவி உட்பட  24 பிரதிவாதிகள் இன்று காலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இவ்வழக்கு  மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில், நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் நீதிபதி இராமநாதன் கண்ணன் உள்ளிட்ட மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.தீர்ப்பு வழங்கப்படும் இன்றைய நாளில் பொலிஸார் நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.