அநுராதபுரம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலலுவெவ குளக்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் அநுராதபுரம், நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீதிவான் விசாரணைகளுக்குப் பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கெக்கிராவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அநுராதபுரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space