நாட்டின் அவசர மருத்துவத் தேவைகளுக்காகச் சேவையாற்றும் 1990 சுவசெரிய சேவையின் புதிய அலுவலகம், கொழும்பு 07, ஹோட்டன் பிளேஸில் அமைந்துள்ள வளாகத்தில் இன்று சனிக்கிழமை (04) திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில், சுவசெரிய சேவையின் ஸ்தாபகரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் இலங்கையின் சுகாதாரத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இந்த சேவையின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்கும் நோக்கில் இந்தப் புதிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1990 சுவசெரிய சேவையின் புதிய அலுவலகம் திறப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space