14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை (2) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன்போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில் 3 இளம் பிக்குகள் அண்மையில் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் 2 இளம் பிக்குகள் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபரான 41 வயது பௌத்த தேரர் தீகவாவி பிரதேசத்திற்கு தப்பி சென்றிருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் 41 வயதுடைய பௌத்த தேரர் தீகவாபி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவை மத்திய முகாம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனைக்காக அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு சந்தேகத்தில் கைதான 41 வயது சந்தேக நபரான பௌத்த தேரரை இன்று (3) புதன்கிழமை அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய மகாம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் - அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space