பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 07 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், வெலிசறையில் உ்ளள புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை (11) இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களாக வெலே சுதா, தெமட்டகொடை சமிந்த, லொக்கு பெட்டி, மிதிகம ருவன், பெக்கோ சமன், ஆர்மி சம்பத், மன்னா ரமேஷ் ஆகியோர் அடங்குவர்.
பூஸா சிறைச்சாலையிலிருந்தவாறே இவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், அவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சிறைச்சாலையானது, நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஒரு விசேட தடுப்பு மையமாகும். இந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் முதலாவது கைதிகள் குழு இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
07 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் வெலிசறை புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space