யாழ்ப்பாணம் - வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரை, சுமார் 04 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வடமராட்சிப் பகுதியில் இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவலுக்கமைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 520 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை சுமார் 04 இலட்சம் ரூபாய் பெறுமதி என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
04 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space