செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மக்களிடயே தற்போது அதிகரித்துள்ளது. பல ஏஐக்கள் இருந்தாலும் சாட்ஜிபிடி இந்த ரேசில் முன்னிலை வகிக்கிறது.
ஓபன் ஏ.ஐ. நிறுவனத்திற்கு சொந்தமான சாட் ஜி.பி.டி. பயனர்களுக்காக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹேக்கிங் மற்றும் பிஷிங் போன்ற இணையத் தாக்குதல்களிலிருந்து கணக்குகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு இது விருப்பத் தேர்வாக (opt-in) வழங்கப்படுகிறது.
இந்த புதிய அம்சம் செயல்படுத்தப்பட்டவுடன், வழக்கமான கடவுச்சொல் உள்நுழைவு முறைக்கு பதிலாக பாஸ் கீ வசதியை வழங்க உள்ளனர்.
அத்துடன் சந்தேகமான நடவடிக்கைகளை தடுக்கும் தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த வசதி, பயனர்களின் தனியுரிமையையும், கணக்கு பாதுகாப்பையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க சாட் ஜிபிடியில் வந்த கூடுதல் வசதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space