அனுராதபுரம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, பெருமளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (03) மாலை அனுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரவெவ ஏரிக்கு அருகில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 106 கிராம் 530 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 103 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space