வெள்ளவத்தையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று புதன்கிழமை (23) இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது 10 கிராம் 230 மில்லிகிராம் போதைப்பொருள், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 66,230 ரூபாய் பணம் மற்றும் வெளிநாட்டுப் பணத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் பணத்தையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இது குறித்த மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
Ad Space
Ad Space