அம்பறை - பாணம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் தியானத்தில் ஈடுபட்டிருந்த தேரர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (26) காலை சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தேரர் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குறித்த ஆரண்ய சேனாசனத்தில் நீண்டகாலமாக தியானத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சிறுத்தை கடித்ததில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே தேரர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பாணம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு தேரர் சிறுத்தை தாக்கி உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space