வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன் கனத்த கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை (29) மாலை நேரப் ரோந்துப் பணியின் போது இந்த டொல்பினின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட அவதானிப்புகளின் போது, அந்த டொல்பினின் உடலில் பல காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த காயங்கள், கடலில் மீன்பிடி வலையில் சிக்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக, இலுவங்குளம் வனவிலங்கு சரணாலயத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் சில கட்டுப்பாடற்ற மீன்பிடி நடவடிக்கைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அரிய வகை பாலூட்டிகளின் பாதுகாப்பிற்கு எந்தளவிற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
வில்பத்து தேசிய பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டொல்பின்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space