கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ நினைவிடத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்வில் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தலங்கம பொலிஸாரால் இன்று (25) முற்பகல் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே விமல் வீரவன்சவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
விமல் வீரவன்ச பிணையில் விடுவிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space