வவுனியா மாநகர முன்னாள் முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 15 வரை இடைக்கால தடை விதித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் முடிவினை சவாலுக்குட்படுத்தி மனுதாரரான முன்னாள் முதல்வர் காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று (3) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா முன்னாள் முதல்வரின் பதவிநீக்கம் தொடர்பான வடக்கு ஆளுநரின் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space