வவுனியாவில் 114 அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குப் புதிய சீருடைகள் கையளிப்பு
Ad Space
Ad Space
வவுனியா கல்மடு சரஸ்வதி அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 42 மாணவர்களுக்கும், வவுனியா பூம்புகார் முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 72 மாணவர்களுக்கும் மொத்தமாக 180, 500 ரூபா பெறுமதியான புதிய சீருடைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை (28.05.2026) காலை மேற்படி இரு அறநெறிப் பாடசாலைகளிலும் இடம்பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத் தொண்டர்களுடன் நேரடியாகக் கலந்து கொண்டு புதிய சீருடைகளைக் கையளித்தார்.
Ad Space
Ad Space