யூரியா உர விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானத்தின் மூலம் எதிர்வரும் வாரத்திற்குள் உரப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி போலியான அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என அவர் ஏனைய தரப்பினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது நாட்டுக்குத் தேவையான உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும், பெரும் போகத்திற்குத் தேவையான உரங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் துஷார விக்ரமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
யூரியா உர விநியோகத்தில் தனியார் துறைக்கும் அனுமதி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space