யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் தற்போது மீண்டும் அனைத்து வகை இரத்தத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் நான்கு குருதிக் கொடை முகாம்கள் இரத்தாகி விட்டது. இதன்காரணமாக இரத்தச் சேகரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குருதிக் கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குத் தினமும் காலை-08 மணியிலிருந்து மாலை-04 மணி வரை வருகை தந்து குருதிக் கொடை வழங்கி இரத்ததானப் பணிக்குப் பங்களிப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் கேட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் மீண்டும் அனைத்து வகை இரத்தத்துக்கும் தட்டுப்பாடு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space