வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் வ டீ.பி சரத் செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருநகர் தொடர்மாடி குடியிருப்புக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள மக்களுடனும், தொடர்மாடி முகாமைக்குழுவுடனும் கலந்துரையாடினார்.
மேலும், தொடர்மாடி குடியிருப்பின் வீடுகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் சேதமடைந்த கட்டடங்களை பார்வையிட்டு, தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினை விரைவில் ஆய்வுக்கு அனுப்பி அதன் அறிக்கையினைப் பெற்று தேவையான அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் தெரிவித்தார்.
மேலும், தொடர்மாடிக் குடியிருப்புக்கு கழிவகற்றல் திட்டத்திற்காக ரூபா 130.00 மில்லியன் ஒதுக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய முன்னேற்றத்தினையும் பிரதி அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
பிரதி அமைச்சரின் களவிஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ்.கபிலன், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சிவகாமி உமாகாந்தன் ஆகியோர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
யாழ். குருநகர் தொடர்மாடி குடியிருப்பிற்கு வீடமைப்பு பிரதி அமைச்சர் களஆய்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space