காக்கை தீவு மீள் சுழற்சி மையத்தால் தாங்கள் தினமும் இன்னல்களை எதிர்கொள்வதாக தெரிவித்து, அதற்கு தீர்வு கோரி இன்று (15) புதன்கிழமை காக்கை தீவு மக்கள் யாழ். மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நான் இந்த குப்பை மேட்டால் அன்றாடம் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளுகிறோம். குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
அங்கே கொட்டப்படும் கழிவுகள் தரம்பிரிக்கப்படுவதில்லை. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்டு மாநகர சபையானது காணப்பட்ட போது தரமான கழிவு முகாமைத்துவம் பேணப்பட்டது. கழிவுப் பொருட்கள் மூலம் சேதனப் பசளை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போதுதான் இவ்வாறான மனிதத்துக்கு ஒவ்வாத பிரச்சினைகள் இடம்பெறுகின்றன.
கழிவுகளை எரிக்கிறார்கள். இதனால் அருகில் இருக்க முடிவதில்லை.
இந்த பிரச்சினைக்கு முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வெளியே வந்து எமக்கு தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மாநகர சபைக்கு உள்ளே செல்ல வேண்டி ஏற்படும் என்றனர்.
யாழ். காக்கை தீவு மீள் சுழற்சி மையத்தால் பிரச்சினை ; போராட்டத்தில் குதித்த மக்கள்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space