தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பின் 45 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (01.06.2026) மாலை-05.15 மணியளவில் மேற்படி பொதுநூலக முன்றலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிதிப் பொறுப்பாளர் தீபன் திலீசன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரியூட்டப்பட்டமையை அறிந்து பேரதிர்ச்சியால் மரணமடைந்த பேரறிஞர் தாவீது அடிகள் மற்றும் யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் நினைவுச் சுடர்கள் ஏற்றி இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.
யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பின் 45 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space