யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து நேற்று(20.05.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி இருவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, காயமடைந்த இரண்டு இளைஞர்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் விபத்து - படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space