யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.
வீட்டின் உரிமையாளரின் முறைப்பாட்டினை அடுத்து, வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளிறங்கிய இருவரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த சந்தேநபர்கள் திருடிய பணத்தை நெடுங்கேணிக்கு எடுத்துச் சென்று அங்கு காணியொன்றில் புதைத்து வைத்துவிட்டு இருவரும் யாழ்ப்பாணம் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து நெடுங்கேணிக்கு விரைந்த பொலிஸார் காணிக்குள் புதைத்து வைத்திருந்த 74 இலட்சம் ரூபா பணத்தை மீட்டுள்ளனர்.
அதேவேளை மிகுதி பணத்தினை நெடுங்கேணியைச் சேர்ந்தவர் எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீதிமன்று அனுமதி பெற்று சந்தேகநபர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் திருடிய குற்றத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space