யாழில் பல பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றி விட்டுத் தனியார் பேருந்தின் சாரதியான ரமேஷ் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை (22.07.2026) காலை நயினாதீவு குறிகட்டுவானிலிருந்து- யாழ்.நகர் நோக்கிப் பயணிகளுடன் பேருந்தின் சாரதி தனியார் பேருந்தைச் செலுத்திச் சென்று கொண்டிருந்த போது மண்கும்பான் சந்திக்கு அருகில் சாரதிக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்துச் சாதுரியமாகச் செயற்பட்ட சாரதி பேரூந்தினை உயிர்ப் போராட்டத்தின் இறுதி நொடிகளிலும் தனது பொறுப்பை மறக்காமல் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவாறு பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார். இதன் பின் நடத்துனரின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
இதேவேளை, உயிர் போகும் நிலையிலும் பல பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய குறித்த சாரதியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழில் உயிர் போகும் நிலையிலும் கடமை மறவாத சாரதி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space