யால தேசிய வனப்பகுதியின் கிரிந்த, பெப்புவ (Bebuwa) வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில் இன்று சனிக்கிழமை (21) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதையடுத்து, பெப்புவ வனஜீவராசிகள் பாதுகாப்பு கடமையில் இருந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எனினும், அதிகாரிகள் அங்கு செல்வதற்குள் சந்தேக நபர்கள் காரில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விலங்குகளை வேட்டையாடும் நோக்கிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தப்பியோடிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கிரிந்த பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
யால சரணாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space