குருணாகல் - ஹெரலியாவல, அலகொலதெனிய உப வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிள் நீர்கொழும்பு - குருணாகலை பிரதான வீதியை நோக்கி பயணித்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நபர் குருணாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் குருணாகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குருணாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space