மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
37ஆம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
பின்னாலிருந்து மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள், காக்காச்சிவட்டை கிராமத்தில் நடைபெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு மண்டூர் நோக்கிப் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் காயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space