மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31ஆம் கட்டை சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மொனராகலையில் இருந்து கொட்டியாகலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 26 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மொனராகலை - கொட்டியாகலை இ.போ.ச. பேருந்து விபத்து : 26 பேர் காயம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space