அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதியை (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவித்து பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளார்.
2026.03.30 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, 2026.05.27 ஆம் திகதி முதல் 2026.06.02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2026.05.02 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட அரசாங்க விடுமுறையை 2026.05.31 ஆம் திகதிக்கு மாற்றப்பட வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே 31 அரசாங்க விடுமுறையாக அறிவிப்பு - பொதுநிர்வாக அமைச்சு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space