முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிப்பு
Ad Space
Ad Space
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று (18) வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
இதில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
Ad Space
Ad Space