முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் - பிரான்சிஸ்
Ad Space
Ad Space
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் மே 18 பிரான்சில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு செவ்ரோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மற்றும் செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பொதுச்சுடரைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்கொடுத்தவர்களின் உறவுகள் உள்ளிட்ட அனைவரும் நினைவுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் மாநகரமுதல்வர்,துணைமுதல்வர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு நினைவேந்தி உரை ஆற்றியிருந்தனர்.
Ad Space
Ad Space