தெற்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் புதன்கிழமை (10) பிற்பகல் கைது செய்யப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தென் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாகாணத்திலுள்ள தன்னார்வ தொண்டர் சங்கங்களுக்கு நாற்காலிகளை விநியோகிப்பதற்காக 16.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே முன்னாள் முதலமைச்சர் நேற்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாது, தயாரிப்பு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட 16,361 நாற்காலிகளை தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததன் ஊடாக, அரசாங்கத்துக்கு இழப்பினை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு ஷான் விஜயலாலுக்கு 12 ஆம் திகதிவரை விளக்கமறியல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space