முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (07) வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரைப் பிணையில் விடுவிப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
2013 ஆம் ஆண்டு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகப் பதவியிலிருந்த போது, இலங்கை முதலீட்டுச் சபையின் விவகாரம் ஒன்றினைச் சாதகமாகச் செய்து கொடுப்பதற்காக வர்த்தகர் ஒருவரிடமிருந்து 1 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார் என்பதே இவர் மீதான பிரதான் குற்றச்சாட்டாகும்.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பிணையில் விடுதலை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space