இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவரை விசாரணைக்காக கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவின்கீழ் தடுத்து வைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முன்னாள் ஜனாதிபதியொருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் நான்காவது மாடியில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தொண்ணூறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.
பௌத்த துறவியொருவரின் பெயரில் உள்ள சமூக ஊடக கணக்கு ஒன்றால் முதலில் வெளியிடப்பட்ட இந்தப் பதிவு, தற்போது பல்வேறு தரப்பினரிடையே பகிரப்பட்டு வருகிறது.
இருப்பினும், இதுவரை எந்தவொரு முக்கிய ஊடகமும் இந்தச் செய்தியை வெளியிடவில்லை.
மேலும் தொடர்புடைய பதிவில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.
விசாரிக்கப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி யார் என்றோ அல்லது அவர் மீது என்ன குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன என்பது தொடர்பிலோ குறித்த பதிவில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு விரைவில் தடுப்புக் காவல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space