மின்சாரம் தாக்கி இருவர் பலி!
Ad Space
Ad Space
பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) மதியம் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 35 வயதுடைய, எஹலியகொட பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விவசாய நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில், குறித்த காணியின் காவலாளியாகப் பணியாற்றிய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்கஹவெல பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space