மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும். நாட்டு மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (2) விசேட கூற்றொன்றை முன்வைத்து அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே அரச பதவிக்கு தகுதியானது ஜே.வி.பி.யா அல்லது உண்மையிலேயே பொதுமக்களுடன் இணைந்து நிற்கும் அரசியல் இயக்கமா என்பதை மக்கள் முன்னிலையில் அறிந்துகொள்ள முடியும். இனியாவது விவசாயிகளை அவமதிப்பதை ஆளும்தரப்பு நிறுத்த வேண்டும்.
இத்தகைய அவமதிப்புகளைச் செய்வதற்கு முன் தங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் உரிய தீர்வினை வழங்க முடியாவிட்டால், நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான, யதார்த்தமான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதற்குத் தங்கள் தரப்பு தயாராக இருக்கிறது என்றார்.
மாகாண சபை தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space